Our Feeds


Monday, September 13, 2021

www.shortnews.lk

BREAKING: 9 மாதத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம்

 



நாட்டில் கடந்த 9 மாத காலப்பகுதியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 102 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதில் சுமார் 39. 8 வீதமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்து 828 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு மேலும் கூறியுயள்ளது.

இதேவேளை, அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அங்கு பதிவாகிய மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 994 பேர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »