Our Feeds


Saturday, September 11, 2021

www.shortnews.lk

BREAKING: கப்ராலின் இடத்திற்கு MPஆக பதவியேற்க்கவுள்ள முக்கிய நபர் ?

 



தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன் இன்னும் இரண்டு தினங்களில் தமது பதவியிலிருந்து விலக உள்ள நிலையில், புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் மீள நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கான அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதால், அவரது தேசியப் பட்டியலின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடத்திற்கு முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவதானம் செலுத்தியுள்ளது.


நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக தனது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து ஜயந்த கெட்டகொட விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »