(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் -19 தனிமைப்படுத்தல் சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மற்றும் பயணக் கட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் காலங்களில் கொவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் குறைவடையும் என எதிர்பார்க்கிறோம்.
கொவிட் -19 தனிமைப்படுத்தல் சட்டத்தை தளர்த்தி, எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டை திறப்பதாக இருந்தால் இதுவரை ஓரளவு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கும் கொவிட் -19 நிலைமையை, அவ்வாறே தொடர்ந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பெரும்பாலானவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை பூரணப்படுத்த வேண்டும்.
அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பாதுகாக்துக் கொள்வது கட்டாயமாகும். அதேபோன்று பயணக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதற்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். நாட்டை முழுமையாக திறப்பதாக இருந்தால், கூடுதலாக எச்சரிக்கையான பிரிவினருக்கு கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.
அதனால் எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டை முழுமையாக திறப்பதாக இருந்தால், தற்போது கட்டுப்படுத்திக் கொண்டுவரும் கொவிட் -19 கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கட்டுப்படுத்திக் கொள்ள தொழில்டநுட்ப ரீதியில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
