Our Feeds


Sunday, September 12, 2021

www.shortnews.lk

BREAKING: தாலிபான்களின் அரசாங்கம் சட்டவிரோதமானது - இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர்

 



தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் மறுத்துள்ளார்.


ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி, தலிபான் அரசாங்கம் சட்டவிரோதமானது என இலங்கை அரசு மற்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகத்திற்கு கடிதம் ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.


இந்த வாரம் இடைக்கால அமைச்சரவை மற்றும் பிரதமரை நியமிப்பதாக தலிபான் அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதுவர்கள் யாரும், தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை வரவேற்கவில்லை என்றும் தூதுவர் ஹைதாரி இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »