வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது வட அகலாங்கு 18.3Nக்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9Eக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இத்தொகுதியானது மேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இன்று (26 ஆம் திகதி) மாலையளவில் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் – தென் ஒடிசா கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் வட அகலாங்குகள் 15.0N – 20.0Nக்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 80.0E – 90.0Eக்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல்வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதோடு, இந்தப் பிரதேசத்தில் கடலில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான பிரதேசத்துக்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவித்துள்ளது.
