Our Feeds


Saturday, September 11, 2021

www.shortnews.lk

JUST_IN: திருகோணமலையில் பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி

 



காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மஹதிவுல்வெவ-தெவனிபியவர பகுதியில் வசித்து வரும் 23 வயதுடைய பெண்ணின் குழந்தை காய்ச்சல் காரணமாக இன்று (11) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனை மூலம் இந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த குழந்தையின் தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »