Our Feeds


Sunday, September 12, 2021

www.shortnews.lk

JUST_IN: ஸஹ்ரானுடன் தொடர்பை பேணியதாக பொலன்னறுவை, தம்பாளையை சேர்ந்த ஒருவர் CIDயினால் கைது.

 



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் தொடர்பை பேணிவந்த குற்றச்சாட்டில் பொலனறுவை தம்பாளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக முன்னெடுத்து வரும் விசாரணையின் போது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த உவைஸ் சைபூல் ரகுமான் என்பவர் சஹ்ரானுடன்தொடர்பை பேணியதாக தெரியவந்ததையடுத்து, குறித்த நபர் 8ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (T)

(க-சரவணன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »