(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆட்சியை நாளுக்கு நாள் மக்கள் வெறுக்கிறார்களே தவிர விரும்பவில்லை. இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய நிலையை தற்போது உணர்கிறோம். நாட்டுக்கு கடவுளின் சாபமா என்று எண்ண தோன்றுகிறது. இராணுவத்தினர் அரச சேவைகளை முன்னெடுத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அபயராம விஹாரையின் விஹாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அபயராம விகாரையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சுபீட்சமான இலக்கு கொள்கை செயற்றிட்டத்தை செயற்படுத்துவதாக கூறிக்கொண்டாலும் மக்கள் மத்தியில் சுபீட்சமான இலக்கு கொள்கை தொடர்பில் நல்ல நிலைப்பாடு ஏதும் கிடையாது.
தற்போதைய நிலைமைய நாட்டுக்கு கடவுள் விடுத்த சாபமா அல்லது கடவுளின் கோபமா என மக்கள் எம்மிடம் வினவுகிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் வருகையை மக்கள் மங்களமாக கொண்டாடினார்கள். ஆனால் இன்று மக்கள் மங்களம் அவமங்களமாகி விட்டது என கருதுகிறார்கள் என்றார்.
