ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் இன்னும் ஒரிரு நாட்களில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்கு முடிவு கட்டும் நோக்கிலேயே பிரதமர் தரப்பால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், அமைச்சர்களான விமல்வீரவன்ச மற்றும் அலிசப்ரிக்கும் இடையில் கடந்த புதன்கிழமை இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் பின்னரே ஜனாதிபதியை சந்திப்பதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.