Our Feeds


Friday, December 31, 2021

ShortNews

ஜனாதிபதி பயணிக்கும் போது ஹூ சத்தம் போட்ட சர்ச்சை? - பொலிசார் வெளியிட்டுள்ள விளக்கம்



பால்மா கொள்வனவு செய்வதற்காக மிரிஹானையில் வரிசையில் நின்றிருந்தவர்கள் ஜனாதிபதி பயணிக்கும் போது ‘ஹூ’ சத்தமிட்டு கிண்டல் செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.


அதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்தை பொலிஸார், பலவந்தமாக பூட்டுப்போட்டு மூடிவிட்டனர் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன.


இந்நிலையில், அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க வில்லை. அச்செய்தி முழுமையாக பொய்யானது என, இலங்கை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி, மிரிஹானவில் பால்மா கொள்வனவு செய்வதற்காக இருந்த வரிசை தொடர்பில் தேடியறியுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »