Our Feeds


Friday, December 31, 2021

ShortNews

கொழும்பில் இன்று முழுவதும் விசேட பலத்த பாதுகாப்பு !



கொழும்பு நகரம் உள்ளிட்ட கொழும்பு புறநகர் பிரதேசங்களில் இன்று (31) பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


காலி முகத்திடலில் விசேட பொலிஸ் பரிசோதனைகள் இடம்பெறுவதுடன் இரவு நேரம் முழுதும் போக்குவரத்து பொலிஸாா் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளா் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளாா்.

அதற்கமைய, மதுபோதையில் வாகனங்களை செலுத்துவோா், அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

அதேபோன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களை இனங்காண்பதற்காக கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங்களில் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »