பொதுஜன பெரமுனவின் அதிகாரத்தில் உள்ள இரத்தினபுரி பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது.
சபைத் தலைவரின் வரவு செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றதை தொடர்பில், வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக 17 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் கிடைக்க பெற்றன.
இதனையடுத்து இரத்தினபுரி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஏ.எம்.பாயிஸ்