Our Feeds


Friday, December 31, 2021

ShortNews

பதுளை மாநகர சபையின் ஆட்சியை இழந்தது SLPP - மேயர் பதவியும் இழப்பு - ஆளுனர் முஸ்ஸம்மில் அதிரடி அறிவிப்பு



(எம். செல்வராஜா)


‘பதுளை மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (SLPP) சார்பான மேயர் பிரியந்த அமரசிரி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.


அவரால் இருமுறை சமர்ப்பிக்கப்பட்ட 2022க்கான வரவு – செலவுத்திட்டம் நிதி அறிக்கை தோல்வியுற்றிருந்தன,

இந்நிலையில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் (31-12-2021 )ஆம் திகதிக்கான (இன்று)  விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலமாக பதுளை மாநகர பிதாவின் பதவி அகற்றி, அப்பதவியை வெற்றிடமாக்கியுள்ளார்.

ஆளுநர் விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பில், “பதுளை மாநகர சபையின் 2022ம் வருடத்திற்குரிய வரவு – செலவுத்திட்டம் தோல்வியடைந்தமையினால், 2021ம் வருட 21ம், 22ம் உள்ளுராட்சி கட்டளை சட்டத்தின் 7ம் பிரிவிற்கமைய பதுளை மாநகர பிதாவின், பதவி வெற்றிடமாக்கப்பட்டுள்ளது. மாநகரக் கட்டளைச் சட்டத்தின் 14ன் (6) பிரகாரம் பிரதி மாநகர பிதாவிற்கு பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை மாநகர சபையின் ஆட்சிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண பொறுப்பிலேயே இதுவரை இருந்து வந்தது. மேற்படி முன்னனியின் சார்பாக பிரியந்த அமரசிரி மாநகர பிதாவாக இருந்து வந்தார். வரவு – செலவுத்திட்டம் தோல்வியடைந்தமையினால், அவரின் பதவி 31-12-2021 முதல் பறிபோனது.

பதுளை பிரதி மாநகர பிதா ரங்கே பண்டார ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »