Our Feeds


Thursday, December 30, 2021

ShortNews

பிரதமராக பசில்? பதவி துறக்கிறாரா மஹிந்த ராஜபக்ஷ?



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போவதாக முகநூல்களில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென புத்தசாசன அமைச்சின் முன்னாள் ஆலோசகர் கலகம தம்மரங்ஸி தேரர் தெரிவித்தார்.


பிரதமர் தமது பதவியை இராஜினாமாச் செய்ய ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் தெரிவித்தார். 

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை தெரிவித்தார்.

சில முகநூல் செய்திகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போவதாகவும் தற்போதைய நிதி அமைச்சர் பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் கௌரவத்தைப்பெற்ற தலைவர். முப்பது வருட காலம் நாட்டில் தொடர்ந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை ஒன்றிணைத்து மக்களை சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுத்தவர் என்றும் சிறந்த உடல் நிலையுடன் அவர் தற்போது உள்ளார் என்றார்.

நாட்டின் முக்கியமாக நடவடிக்கைகளை எவ்வித தங்குதடையும் இன்றி அவர் மேற்கொண்டு வருகிறார். அவரால் தொடர்ந்தும் அப்பதவியை சிறப்பாக முன்னெடுக்க முடியும். 

சில அடிப்படைவாதக் குழுக்களும், தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக செயற்படும் சில சக்திகளும் இத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு அதுவல்ல எனவும் தேரர் தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »