நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையால் நகர்ப்புறங்களில் மட்டுமன்றி கிராமப்புற மக்களும் கடும் அதிருப்தியடைந்துள்ளதால், அது அரசாங்கத்தின் மீதான வெறுப்பாக மாறத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றில் ஆளுங்கட்சியின் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், ஆளுங்கட்சியின் பிரதான வாக்கு வங்கியாக கருதப்படும், முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் கோட்டையான ஹொரணை பிரதேச சபையில் ஆளுங்கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆளும் ஹொரண பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நான்கு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் கிடைத்தன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பொதுஜன பெரமுனவின் 7 உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.