நாளொன்றுக்கு 40 ஆயிரம் வரையிலான 12.5 கிலோ கிராம் லிற்றோ காஸ் சிலிண்டர்களே தயாரிக்கப்பட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், காஸ் சிலிண்டர் தயாரிப்புப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாலேயே சந்தைகளில் காஸ் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லிற்றோ காஸ் நிறுவனம் இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 80 ஆயிரம் சிலிண்டர்களை தயாரித்து சந்தைகளுக்கு விநியோகித்தது என கூறும் அந்த அதிகாரி, காஸின் உள்ளடக்கம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்ததால், தயாரிக்கப்படும் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததாகவும் தெரிவித்தார்.
இதேவேளை 5 கிலோ, 2.3 கிலோ கிராம் காஸ் சிலிண்டர்களுக்கும் எரிவாயு நிரப்பும் பணிகளும் மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுகிறது. இதனால் சிறிய காஸ் சிலிண்டர்களுக்கும் கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன எனவும் கூறினார்.
மேலும், சந்தைகளில் உள்ள பழைய சிலிண்டர்கள் மீள பெறப்பட்டு அதில் உள்ள பழைய எரிவாயுவை வெளியேற்றும் செயற்பாடுகளுக்கு அதிகக் காலம் எடுப்பதுவும், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடுகளுக்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.
பழைய சிலிண்டர்களை சுத்தம் செய்யவதற்கான இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் சிலிண்டர் தயாரிப்புப் பணிகள் வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.