யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களின் 3 ஆயிரம் ரூபா அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.
அத்தோடு இலங்கையில் டொலருக்கான தட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் தங்க இறக்குமதியும் தடை செய்யப்பட்டுள்ளதால் அதன் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் இன்று (29) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 950 ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்று அதன் விலை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்டது.
24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.