Our Feeds


Wednesday, December 29, 2021

ShortNews

நாட்டில் தற்போதுள்ள சிறு பிரச்சனைகளுக்காக பிரதமர் பதவி விலகப்போவதில்லை : முருத்துட்டுவே ஆனந்த தேரர்



பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகப்போவதில்லை என்று நாட்டை பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பி்ன்போது, அபேயராம விஹாராதிபதியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்துட்டுவே ஆனந்த தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்

மஹிந்த ராஜபக்ச குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தால், அவர் முதன்முதலாக தமது அமைப்பிடமே தெரிவித்திருப்பார்.

எனினும் அவர் தனிப்பட்ட ரீதியில் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தால், அல்லது சூழ்ச்சியின் அடிப்படையில் அவர் பதவி விலகவேண்டியேற்பட்டால், அதனை மேற்கொள்ளவேண்டாம் என்று தாம் கோருவதாக தேரர் குறிப்பிட்டார்.

நாட்டில் இன்று சிறு சிறு பிரச்சினைகள் உள்ளபோதும், தமக்காக மக்கள் சேவைக்காக அழைத்து வந்த சகோதரரான கோட்டாபய ராஜபக்சவை கைவிட்டு அவர் செல்லமாட்டார் என்பது தமது நம்பிக்கை என்றும் முருத்துட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »