Our Feeds


Thursday, December 30, 2021

ShortNews

Laugfs கேஸ் சிலிண்டர்களை பொதுமக்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள Laugfs நிறுவனம் தீர்மானம்



டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையேற்பதற்கு Laugfs எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.


பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான நுகர்வோருக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என Laugfs எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

Laugfs எரிவாயு விற்பனை முகாமையாளர் அல்லது விநியோக பிரதிநிதிகளை சந்தித்து சிலிண்டர்களை கையளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்கும் போது, அதன் நிறைக்கமைய பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது அதற்கேற்ற புதிய சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக Laugfs எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »