நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவி வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (26) பகல் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்கள் திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையில் வைத்து பாவனையாளர்களுக்கு விற்பனை செய்ததை எம்மால் காணக்கூடியதாக இருந்தது
மேலும் இவ்வாறு விநியோகம் செய்யப்பட்ட சமையல் எரிவாயு பல சிரமத்திற்கு மத்தியில் பலர் காத்திருந்து கொள்வனவு செய்தததையும் இவ்வாறு வருகை தந்த சமையல் எரிவாயு குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே வழங்க போதுமானதாக இருந்ததாகவும் பலர் சமையல் எரிவாயு கொள்கலன் கொள்வனவு செய்ய முடியாமல் வீடு திரும்பியதும் எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது
இவ்வாறு இருக்கையில் சந்தையில் போதுமான சமயல் எரிவாயு கிடைப்பதில்லை எனவும் தொடந்து சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீடிப்பதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(ரவ்பீக் பாயிஸ்)