Our Feeds


Saturday, July 18, 2026

SHAHNI RAMEES

தொடர்ந்து 7ஆவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

 


தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது"

என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது இரவாகவும் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 


இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் "கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை" தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 


இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை இலக்கு வைத்து தாக்கியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »