(எம்.எப்.எம்.பஸீர்)
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவ்விருவரிடமும் விசாரணைகள், தடுப்புக் காவலில் இடம்பெறுவதாக சிரிஐடி எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நேற்று ( 30) கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகேவுக்கு அறிவித்தனர்.
உஹுமீய – கெபல்லவ பகுதியைச் சேர்ந்த தோனதுவகே தொன் சமன் புத்திக , ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் ரிஸ்மி மொஹம்மட் ரிஸ்வான் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக்கொண்ட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரித்து வருவதாக சிரிஐடியினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இந் நிலையில், மொஹம்மட் ரிஸ்மி மொஹம்மட் ரிஸ்வான் எனும் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்த சிரிஐடி அதிகாரிகள், அவர் நீதிவானிடம் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்க எதிர்ப்பார்ப்பதாக கூறினர்.
இந்நிலையில், இரகசிய வாக்குமூலம் வழங்குவது தொடர்பில் ஒன்றுக்கு இரு முறை சிந்தித்து எதிர்வரும் நாள் ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதானால் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் சந்தேக நபருக்கு ஆலோசனை வழங்கினார்.