Our Feeds


Saturday, January 8, 2022

SHAHNI RAMEES

பணத்திற்கு சூது விளையாடிய ஆறு பேர் நேற்றிரவு (07) கைது

 

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணத்திற்கு சூது விளையாடிய ஆறு பேரை நேற்றிரவு (07) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38, 32, 45, 22 மற்றும் 20 வயதுடைய ஆறு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், பேராறு ஆற்றங்கரை பகுதியில் பணம் செலுத்தி சூது விளையாடிக்கொண்டிருந்த போது கந்தளாய் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றி வளைத்து சூது விளையாடிய ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும், சூது விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருபதாயிரம் ரூபாய் பணத்தினை கைப்பற்றி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »