Our Feeds


Thursday, January 13, 2022

SHAHNI RAMEES

காணாமல் போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி வீடு திரும்பினார்.

 

மஹரகம பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன 15 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் விபரம் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், அதனையறிந்த சிறுமி தனது தாயாரை தொலைப்பேசியில் அழைத்து வீடு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சிறுமியின் தாய் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பவம் தொடர்பில் சிறுமியிடம் பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பெற உள்ளனர்.

மஹரகம நாவின்ன பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

கடந்த ஜனவரி 7ம் திகதி முதல் அந்த சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

காணாமல் போன சிறுமி தொடர்பில் எந்தத் தகவலும் வெளிவராத நிலையில் குறித்த சிறுமி தொடர்பான தகவல்களை ஊடகங்கள் ஊடாக வெளியிட பொலிஸார் தீர்மானித்திருந்தனர்.

அதன் பிரகாரம், அவர் குறித்த தகவலை பொலிஸார் நேற்று ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »