Our Feeds


Tuesday, January 4, 2022

SHAHNI RAMEES

20ஆவது திருத்தத்தை உடனடியாக நீக்கவேண்டும் - முன்னால் ஜனாதிபதி மைத்திரி காட்டம்

 

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நீக்கவேண்டும் என்றும் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திலுள்ள குறைகளை திருத்தி மீண்டும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தாா்.

மாத்தளை கிரேண்ட் மவுன்டன் ஹோட்டலில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனியொரு கட்சியால் மீண்டும் ஆட்சியமைக்க முடியாது. அதனால் திருடிர்களதும் ஊழல்வாதிகளதும் ஆதிக்கம் இல்லாத புதிய கூட்டணி அரசாங்கத்தின் கீழ் பரந்துப்பட்ட புதிய அரசியல் கொள்கையொன்றை தயாரித்து புதிய பயணத்துக்கு தலைமைத்துவம் வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருக்கிறது.

பிரதேச சபையிலிருந்து நாடாளுமன்றம் வரையில் சகல பிரிவுகளிலும் திருடர்களே இருக்கிறார்கள். பிரதேச சபையின் மணல் அனுமதிப் பத்திரத்தினூடாகவும் பணம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கு சென்றதும் வியாபர நடவடிக்கைகளினூடாக விலைமனு கோரளினூடாகவும் பணம் உழைக்கிறார்கள்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவையும் ஒரேடியாக தூக்கி எறிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »