Our Feeds


Saturday, January 1, 2022

SHAHNI RAMEES

2021 இல் 15.86 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

 

கடந்த 2021ஆம் ஆண்டு கடற்படையினரால் முன்னெடுக்கபட்ட பல்வேறு நடவடிக்கைகள்  மூலம் 15.86 பில்லியன்   பெறுமதியான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

74 சந்தர்ப்பங்களில் 1268 கிலோகிராம் ஹெரோய்ன்  போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய 119 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த 119 சந்தேகநபர்களுள் 22 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் 151 சந்தர்ப்பங்களில் 7095 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய 186 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 7 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »