Our Feeds


Friday, January 21, 2022

ShortNews

2022 டி20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடருக்கான கால அட்டவணை வௌியானது

 

அவுஸ்திரேலியாவில் இந்தாண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 2022 டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, போட்டியின் முதற்சுற்று போட்டிகள் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கீலொங்கில் நடைபெறவுள்ளது.

முதல்சுற்றில் இருந்து நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி சூப்பர் 12 சுற்று சிட்னியில் ஆரம்பமாக உள்ளது.

சூப்பர் 2 சுற்றின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒக்டோபர் 23-ம் திகதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கால அட்டவனையை பார்வையிட Click Here


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »