Our Feeds


Thursday, January 13, 2022

ShortNews

பரசூட்டில் பறந்த வெளிநாட்டு பிரஜை 30 அடி உயர மரத்தில் சிக்கி விபத்து - நடந்தது என்ன?



கலஹா, லுல்கந்துர பகுதியில் பராசூட்டில் பறந்த வெளிநாட்டு பிரஜை  விபத்தில் காயமடைந்துள்ளார்.

35 வயதான ரஷ்ய பிரஜையொருவரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர், ரெலிமங்கொட பிரதேசத்தில் தரையிறங்க முற்பட்ட வேளையில் சுமார் 30 அடி உயரமுள்ள மரமொன்றில் பராசூட் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »