Our Feeds


Monday, January 24, 2022

ShortNews

இரண்டு எரிபொருள் கப்பல்களுக்கு 93 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துகிறது மத்திய வங்கி - கம்மன்பில



கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியினால் 93 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


35,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 37,500 மெட்ரிக் டன் டீசலைப் பெறுவதற்காக இந்தக் கொடுப்பனவு செலுத்தப்படவுள்ளது.

இதன்படி, நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும், இதனூடாக தடையற்ற மின்சார விநியோகத்தை மேற்கொள்ளமுடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து மின்வெட்டை அமுல்படுத்த போவதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »