எரிபொருளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு 93 பில்லியன்(9300 கோடி) ரூபாயை இலங்கை மின்சார சபைக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, திறைசேரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என மின்சக்தி அமைச்சுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்ததுடன், பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான நிதியை செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி தமக்கு பணிப்புரை விடுத்ததாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நேற்று (24) இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறினார்.