கணேமுல்ல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் மஹபாகே பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20, 26, 28 மற்றும் 30 வயதுடைய கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
சந்தேகநபர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 17 முச்சக்கர வண்டிகளில் இருந்து 12 முச்சக்கர வண்டிகள் மற்றும் 5 முச்சக்கர வண்டிகளின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முச்சக்கர வண்டிகளின் இயந்திர இலக்கங்கள் மற்றும் சேஸ் இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ராகம, மஹாபாகே, வத்தளை, ஜா-எல, கந்தானை, பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் இருந்து முச்சக்கர வண்டிகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (04) வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.