Our Feeds


Wednesday, January 5, 2022

SHAHNI RAMEES

அதிக சவால்கள் உள்ள மற்றுமோர் அமைச்சையே தான் விரும்புகிறேன் - அமைச்சர் பந்துல குணவர்தன

 

வேறோர் அமைச்சுக்குதான் நியமிக்கப்பட்டால் அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அதிக சவால்கள் உள்ள மற்றுமோர் அமைச்சையே தான் விரும்புவதாக தெரிவித்தார்.

மிகவும் பரபரப்பாக பேசப்படும் அமைச்சரவை மாற்றம் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஊடகங்களுக்கு நேற்று (04) கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எந்த அமைச்சும் நன்றாக இருக்கிறது, அமைச்சுக்கு அதிக சவால்கள் இருந்தால் நான் அதிகமாக திட்டப்படுவேன். அத்தகைய அமைச்சையே ஏற்க நான் ஆர்வமாக உள்ளேன்'' என்றார். அரிசியின் விலையை இன்று முதல் குறைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »