உலகில் உள்ள கொரோனா வைரஸின் எந்தவொரு திரிபுகளும் நாட்டுக்குள் நுழைய முடியுமென தெரிவிக்கும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், தடுப்பூசிகளை செலுத்திகொண்டவர்களுக்குக் கொரோனா வைரஸின் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதால் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் தடுப்பூசிகளை செலுத்திகொண்டவர்களுக்கு குறைவாகவே இருக்கும். குறிப்பாக உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தளவில் காணப்படும். அதுபோல தடுப்பூசியை செலுத்திகொண்டவரிடமிருந்து ஏனையோருக்கு வைரஸ் பரவுவதும் குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
உலகில் உள்ள எந்தவொரு கொரோனா வைரஸ் திரிபும் பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் ஊடாக இலங்கைக்குள் நுழைய முடியும். ஆனால், உலகில் உள்ள கொரோனா வைரஸ் திரிபுகளில் பல இதுவரையில் இலங்கைக்குள் வரவில்லை. அவ்வாறு வந்த சில திரிபுகளாலும் பாதிப்புகள் குறைவாகவே இருந்தன எனவும் கூறினார்.
டெல்டா, ஒமிக்ரோன் வைரஸ்கள் இலங்கைக்குள் நுழைந்திருந்தன. நாம் எதிர்பார்த்ததைவிட சில வைரஸ் திரிபுகள் காலத்தமாதமாகியே நாட்டுக்குள் வந்தன.