புதிய சட்டம் அமுலாகும் வரையில் மாகாண சபை தேர்தல் இடம்பெறாது என்று தேர்தல் முறை தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த தெரிவித்துள்ளாா்.
வேண்டாம் என்று கூறும்போதே மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் தவறான சட்டமூலமொன்றுக்கு கையை உயர்த்தி ஆதரவளித்ததாகவும், மாகாணசபை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் புதிதாக பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
குறித்த சட்டத்துக்கு தவறான முறையில் அனுமதி பெறப்பட்டுள்ளதுடன் அதனை முழுமையாக இரத்து செய்ய வேண்டி ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகவே இருக்கிறது. தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதுதொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாட அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.