TIK TOK சமூக ஊடக வலையமைப்பினால் ஏற்பட்ட மோதல் ஒன்று காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
17 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் TIK TOK சமூக ஊடகம் கடந்த சில வருடமாக பிரபல்யமடைந்து வருகின்ற நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.