Our Feeds


Monday, January 10, 2022

ShortNews

கொழும்பில் இன்று கண்டெடுக்கப்பட்ட மூன்றாவது சடலம் - என்ன நடக்கிறது?



கொழும்பு நீர்நிலைகளிலிருந்து இன்று (10) மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி ஆகிய பகுதிகளில் இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று காலை கரையொதுங்கியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு கரையொதுங்கிய சடலங்கள் உருகுலைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு சடலங்கள் மீதான நீதவான் விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து, சடலங்கள் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, கொலன்னாவ எரிபொருள் கூட்டுதாபன வளாகத்திலுள்ள கால்வாயிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சடலமும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை  என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »