Our Feeds


Monday, January 17, 2022

ShortNews

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து, வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து, வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.


கொழும்பு துறைமுக நகர் சீனாவிற்கும், திருகோணமலை எரிபொருள் தாங்கி இந்தியாவிற்கும், கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவிற்கும் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியன வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.


 
இந்த நிலையிலேயே, அரசாங்கம் வெளிநாடுகளுக்கு சொத்துக்களை விற்பனை செய்து வருவதாக அநுர குமார திஸாநாயக்க கூறுகின்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »