Our Feeds


Wednesday, January 5, 2022

SHAHNI RAMEES

சந்தையில் அரிசி விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு

 

சந்தையில் அரிசி விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார்.

வழமையாக ஜனவரி மாதத்தில், குறித்த ஆண்டுக்கான பெரும்போக அரிசி சந்தைக்கு கிடைக்கும்.

ஆனால், உரப் பிரச்சினை காரணமாக இந்த முறை போதியளவான அரிசி சந்தைக்கு கிடைக்கப்பெறவில்லை என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »