Our Feeds


Wednesday, January 5, 2022

SHAHNI RAMEES

லிட்ரோ நிறுவனத்தை பாதுகாக்கும் பெசில் ? - முஜிபுர் ரஹ்மான் காட்டம்

 

சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தும், லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பெசில் உள்ளிட்டோர் அந்த நிறுவனத்தை பாதுகாக்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தாா்.

குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு அழைத்தும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஆஜராகமால் இருப்பது, அந்த நிறுவனத்தின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கின்றமை உறுதியாகின்றது என்றும், நிதி அமைச்சின் கீழ் இயங்கும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் தலைமைகள் பாகாப்பு வழங்குகிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினாா்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டாா்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »