Our Feeds


Wednesday, January 5, 2022

ShortNews

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் உயிரிழப்பு



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸாா் , கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.


பள்ளி வீதி, கல்முனையைச் நேசர்ந்த 42 வயதுடைய சல்லி மொஹமட் கலின் (சந்தேக இலக்கம் 1123) என்பரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக பொலிஸாா் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.

உயிரிழந்துள்ள சந்தேகநபர் நோய் நிலைமையின் காரணமாக கடந்த நவம்பா் மாதம் 23ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னா், மேலதிக சிகிச்சைக்காக டிசம்பா் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தங்கி சிகிச்சைப்பெற்று வந்துள்ளாா்.

இவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாா் நீதிமன்றத்திடம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »