Our Feeds


Saturday, January 22, 2022

SHAHNI RAMEES

சுதந்திர தினத்தன்று பொதுமன்னிப்பில் விடுதலையாகும் ரஞ்சன்?

 

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியை தொலைபேசி வழியாக நேற்று தொடர்புகொண்ட சஜித், மனித நேயத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்குமாறும் கோரியுள்ளார் என தெரியவருகின்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற சஜித், ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் கிட்டும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல ரஞ்சனின் விடுதலைக்காக சர்வதேசம் செல்லகூட தயாராகவே இருக்கின்றோம் எனவும் சஜித் அறிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் சுதந்திர தினத்தில் ரஞ்சன் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »