Our Feeds


Sunday, January 16, 2022

ShortNews

அனைவரும் அரிசியை இறக்குமதி செய்யலாம் - பந்துல குணவர்தன

 

சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்த எவருக்கும் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஒரு கிலோவுக்கு 25 சதம் வரி செலுத்தி எவரும் அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சதொச மற்றும் பல்வேறு அரச கூட்டுத்தாபனங்களின் ஊடாக 500,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை 150 ரூபாயைத் தாண்ட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 அரிசி கொள்கலன்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »