Our Feeds


Sunday, January 16, 2022

ShortNews

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தனித்துவமான அரசாங்கத்தின் புதிய பயணம்

 

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தனித்துவமான பொருளாதார வேலைத்திட்டத்துடன் கூடிய பயணத்தை இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தில் வீட்டுத்தோட்டத் துறை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புத்தாண்டு தொடக்கத்தில் அரசாங்கம் விரைவான அபிவிருத்திப் பயணத்தை மேற்கொள்ளும் என அரசாங்க அரசியல்வாதிகள் பலர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »