பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதனால், பக்க விளைவுகள் ஏற்படுவதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர், விசேட வைத்தியர் டொக்டர் ரஞ்ஜித் பட்டுவன்துடுவ தெரிவிக்கின்றார்.
சர்வதேச ரீதியில் பரவிவரும் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதே ஒரு வழி என அவர் கூறுகின்றார்.
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்துடன், 50 லட்சத்தை தாண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்