Our Feeds


Monday, January 31, 2022

ShortNews

பசில் ராஜபக்க்ஷவின் "ஒரு இலட்சம் பணிகள்" நாட்டின் பொருளாதாரத்தை வலுவூட்டும்.


"ஒரு இலட்சம் பணிகள்" என்ற வேலைத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்குப் பெரும் பங்களிப்பு வழங்குமென்று பாராளுமன்ற உறுப்பினர் சஜீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவின் எண்ணக்கருவிற்கமைய இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்துக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் வேலைத்திட்டம், நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜீவ எதிரிமான்ன மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »