Our Feeds


Monday, January 24, 2022

ShortNews

கடும் வறட்சியை எதிர்நோக்கும் நாடு ! மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக குறைவு!!

 


மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது.

காசல்ரி,மவுசாகலை,கெனியோன், லக்ஸபான,நவலக்ஸபான, விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளன.


 
தேசிய மின் உற்பத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்யும் காசல்ரி நீர்த்தேககத்தின் நீர் மட்டம் என்றுமில்லாதவாறு தாழ்ந்துள்ளது.தற்போது சுமார் 15 அடிவரை தாழ்ந்துள்ளதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தாழ்ந்து காணப்படுவதனால் நீரில் மூழ்கிகிடந்த கட்டடங்கள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன.

நீர் ஓடைகள்,அருவிகளின் நீர் வற்றிக் காணப்படுவதனால் சிறிய நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியும் பாரிய அளவில் குறைவடைந்துள்ளன. உள்ள பற்றைக்காடுகளுக்கு விசமிகள் மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும், பொழுது போக்குக்காகவும் தீ வைப்பதனால் நீரூற்றுக்கள் அற்றுப்போய் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அபாயமும் காணப்படுகின்றன.


 
எனவே காடுகளுக்கு தீ மூட்டுவதனை உடன் நிறுத்துமாறு பொது மக்களிடம் சூழல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக இந்த வரட்சியான காலநிலை காணப்படும் பட்சத்தில் விவசாயத்துறையும் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகளும் காணப்படுகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »