லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்கவை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு கலவை சம்பந்தமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியை கவனத்தில் கொண்டு ஜயசிங்கவை நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனில் கொஸ்வத்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் தெஷார ஜயசிங்க அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு இரண்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டதுடன் மூன்றாவதாக ரேணுக பெரேரா தற்போது நியமிக்கப்படவுள்ளார்.