ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான வழக்கில் தன்னை எந்தவிதத்திலும் சிறை வைப்பதற்கான சாத்தியம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன்னை சிறை வைப்பதற்கான எந்தவித காரணங்களும் கிடையாது என அவர் கூறுகின்றார்.
தன்னை சிறையில் வைப்பதற்கு சாட்சியங்கள் மற்றும் காரணங்கள் கிடையாது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.