சர்வதேச நாடுகளிடம் பிச்சையெடுக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இறுதி யுத்தக் காலத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அனுபவிக்கக்கூடிய நிலையொன்று ஏற்படுமோ என தான் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஆட்சியைக் கைப்பற்றி தக்க வைத்துக்கொள்ளவதற்காக, ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பொருளாதாரமும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆளுந்தரப்பு அமைச்சர்களே மக்களை அச்சுறுத்தும் வகையிலும் எச்சரிக்கும் வகையிலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து பேச ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.