Our Feeds


Monday, January 10, 2022

ShortNews

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கல்முனை மேல் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட பயங்கரவாதி ஸஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா!



(பாறுக் ஷிஹான்)


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை சிங்கள மொழியில் காணப்பட்டதால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 திகதிக்கு வழக்கு மறு தவணை இடப்பட்டுள்ளது.

குறித்த குற்றப் பத்திரிகையை சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்னத்தின் கையெழுத்துடன் அவர் சார்பாக அரச சட்டவாதியினால் கல்முனை மேல் நீதிமன்றில் இன்று (10) தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய குற்றப் பகிர்வுப் பத்திரமானது கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட நிலையில், குற்றப்பத்திரமானது சிங்கள மொழியில் காணப்பட்டமையினால் சந்தேக நபர் தமிழ் பேசும் ஒருவராக இருப்பதனால் குற்றப்பத்திரத்தில் உள்ள சகல விடயங்களையும் தமிழ் மொழியில் மாற்றி வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு குறித்த வழக்கை ஆராய்ந்த நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

இதன்போது ஸஹ்ரானின் மனைவியான பிரதிவாதி பாத்திமா ஹாதியா மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்துக்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »